இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு
|இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ராஜ்கோட்,
கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.