< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
கடைசி ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
|21 Dec 2023 4:12 PM IST
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்
பார்ல்,
இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற புள்ளிகணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்ல் நகரில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.