< Back
கிரிக்கெட்
கடைசி ஒருநாள் போட்டி: இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து- தொடரையும் கைப்பற்றியது
கிரிக்கெட்

கடைசி ஒருநாள் போட்டி: இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து- தொடரையும் கைப்பற்றியது

தினத்தந்தி
|
31 March 2023 1:14 PM IST

நியூசிலாந்து அணி 32.5 ஓவர்களில் 4 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஹாமில்டன்,

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என வென்ற நிலையில், இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது.

முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அனி, ஆரம்பம் முதலே நியூசிலாந்து பந்துவீச்சில் திணறியது.

தொடக்க ஆட்டக்காரரான பதுன் நிஷாங்கா மட்டும் நிலைத்து நின்று 57 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் இலங்கை அணி 41.3 ஓவர்களில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. அந்த 32.5 ஓவர்களில் 4 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையினான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஏப்ரல் 2ம் தேதி தொடங்குகிறது.

மேலும் செய்திகள்