< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்கா நியமனம்...!
|20 Oct 2023 4:53 PM IST
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகள் என்றால் அவை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள்தான். இந்த இரு அணிகளும் இதுவரை தலா 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இன்று நியமிக்கப்பட்டுள்ளார். லசித் மலிங்கா ஐபிஎல் தொடரில் 2008 - 2017 மற்றும் 2019 - 2020 ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஷேன் பாண்ட் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.