< Back
கிரிக்கெட்
லங்கா பிரிமீயர் லீக்: ஹசரங்கா அதிரடி ஆட்டம்...ஜாப்னா அணியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த கேண்டி...!

Image Courtesy: @LPLT20

கிரிக்கெட்

லங்கா பிரிமீயர் லீக்: ஹசரங்கா அதிரடி ஆட்டம்...ஜாப்னா அணியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த கேண்டி...!

தினத்தந்தி
|
6 Aug 2023 7:12 AM IST

பி-லவ் கேண்டி அணி தரப்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹசரங்கா 22 பந்தில் 52 ரன்கள் குவித்தார்.

பல்லேகலே,

லங்கா பிரிமீயர் லீக் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் ஜாப்னா கிங்ஸ் அணியும், பி-லவ் கேண்டி அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஜாப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஜாப்னா அணி தரப்பில் துனித் வெல்லாகலே 38 ரன், பிரியமால் பெரேரா 22 ரன் எடுத்தனர். கேண்டி அணி தரப்பில் ஹசரங்கா, பிரதீப் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 118 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேண்டி அணி களம் இறங்கியது.

கேண்டி அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பக்கார் ஜமான் 42 ரன், சண்டிமால் 22 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய ஹசரங்கா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 22 பந்தில் 52 ரன்கள் குவித்தார். இறுதியில் கேண்டி அணி 13 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 118 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்