லங்கா பிரிமீயர் லீக்: ஹசரங்கா அபாரம்...காலே அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பி-லவ் கேண்டி...!
|கேண்டி அணி தரப்பில் ஹசரங்கா 27 பந்தில் 64 ரன் மற்றும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பல்லேகலே,
லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் காலே டைட்டன்ஸ் மற்றும் பி-லவ் கேண்டி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பி-லவ் கேண்டி அணி முதலில் பேட்டிங் ஆடியது.
கேண்டி அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது ஹாரிஸ் 17 ரன், பக்கார் ஜமான் 45 ரன், அடுத்து களம் இறங்கிய சண்டிமால் 25 ரன், மேத்யூஸ் 40 ரன், கேப்டன் ஹசரங்கா அதிரடியாக ஆடி 27 பந்தில் 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் கேண்டி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்தது. இதையடுத்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காலே டைட்டன்ஸ் அணி களம் இறங்கியது.
காலே டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய குரூஸ்புல்லே 27 ரன், ஷெவான் டேனியல் 0 ரன், பானுகா ராஜபக்சே 5 ரன், டிம் செய்பர்ட் 1 ரன், ஷகில் அல் ஹசன் 11 ரன், தசுன் ஷனகா 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 47 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
இறுதியில் காலே டைட்டன்ஸ் அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 114 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பி-லவ் கேண்டி அணி 89 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. கேண்டி அணி தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.