லங்கா பிரீமியர் லீக்: நிசாங்கா, பெர்ணாண்டோ அரைசதம்...ஜாப்னா கிங்ஸ் 177 ரன்கள் குவிப்பு
|ஜாப்னா கிங்ஸ் தரப்பில் நிசாங்கா 51 ரன்னும், பெர்ணாண்டோ 59 ரன்னும் எடுத்தனர்.
பல்லேகலே,
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் தொடரான ஐ.பி.எல். போன்று பல நாடுகளில் பல்வேறு தொடர்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் நடத்தப்படுகிறது. இதுவரை 4 சீசன்கள் முடுவடைந்த நிலையில்,தற்போது 5-வது சீசன் நேற்று தொடங்கியது.
இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 2வது லீக் ஆட்டத்தில் சரித் அசலங்கா தலைமையிலான ஜாப்னா கிங்ஸ் அணியும், நிரோஷன் டிக்வெல்லா தலைமையிலான காலி மார்வெல்ஸ் அணியும் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜாப்னா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குசல் மெண்டிஸ் 4 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து அவிஷ்கா பெர்ணாண்டோ களம் இறங்கினார். நிசாங்கா - பெர்ணாண்டோ இணை அதிரடியாக ஆடியது.
அதிரடியாக இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் நிசாங்கா 51 ரன்னிலும், பெர்ணாண்டோ 59 ரன்னிலும் அடுத்து களம் இறங்கிய ரீலி ரோசவ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து சரித் அசலங்கா மற்றும் தனஞ்செயா டி சில்வா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் அதிரடியாக அசலங்கா 15 பந்தில் 33 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இறுதியில் ஜாப்னா கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. காலி மார்வெல்ஸ் தரப்பில் ஜாகூர் கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காலி மார்வெல்ஸ் அணி ஆட உள்ளது.