சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த கொல்கத்தா அணி வீரர்கள்...!
|ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை,
ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது .
இந்த போட்டி முடிந்த பின்னட் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர்.
இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வருண் சக்கரவர்த்தி அந்த பதிவில்,
தினமுன் இரவு வானில் மில்லியன் ஸ்டார்களை பார்க்கலாம். ஆனால் இந்த சூப்பர் ஸ்டாரை பார்ப்பது என்பது வாழ்நாளில் ஒருமுறையாவது நடக்கும். ஆமாம் !!! அது நடந்தது!!!
ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன். அவர் எங்களிடம் பேசிய விதம் ஒரு குடும்ப உறுப்பினரை போல் உணர வைத்தது. "LIVING WITH THE HIMALAYAN MASTERS" என்ற அற்புதமான புத்தகத்தை பரிசாக வழங்கியதற்கு நன்றி.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.