கோலி அரைசதம்...பெங்களூரு அணி 174 ரன்கள் குவிப்பு...!
|ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு - டெல்லி அணிகள் ஆடி வருகின்றன.
பெங்களூரு,
16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சு தேர்வு செய்தது.
இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் குவித்த நிலையில் டு பிளிஸ்சிஸ் 22 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து களம் இறங்கிய லோம்ரார் 26 ரன், மேக்ஸ்வெல் 24 ரன், ஹர்ஷல் படேல் 6 ரன், தினேஷ் கார்த்திக் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதற்கிடையில் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கோலி 50 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து அனுத் ராவத் இம்பேக்ட் பிளேயராக களம் இறங்கி ஷாபாஸ் அகமதுவுடன் ஜோடி சேர்ந்தார். இறுதியில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆட உள்ளது.