< Back
கிரிக்கெட்
கோலியா...தோனியா...உங்களுடன் தொடக்க ஆட்டக்காரராக யாரை தேர்ந்தெடுப்பீர்கள்..? - ஆஸி. வீராங்கனை அளித்த பதில்...!
கிரிக்கெட்

கோலியா...தோனியா...உங்களுடன் தொடக்க ஆட்டக்காரராக யாரை தேர்ந்தெடுப்பீர்கள்..? - ஆஸி. வீராங்கனை அளித்த பதில்...!

தினத்தந்தி
|
8 March 2023 3:46 PM IST

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) மும்பையில் நடைபெற்று வருகிறது.

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் மும்பையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், உ.பி.வாரியர்ஸ் என 5 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

புள்ளிபட்டியலில் 2வது மற்றும் 3வது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இதுவரை நடந்து முடிந்துள்ள 5 லீக் ஆட்டங்களின் முடிவில் மும்பை, டெல்லி அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களிலும், உ.பி.வாரியஸ் அணி 2 புள்ளியுடன் 3வது இடத்திலும், பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காமல் புள்ளிப்பட்டியலில் 4வது மற்றும் 5வது இடத்தில் உள்ளன.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டரும், பெங்களூரு அணி வீராங்கனையுமான எல்லிஸ் பெர்ரியிடம், உங்களுடன் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி மற்றும் எம்எஸ் டோனி ஆகியோரில் யாரை தேர்வு செய்யவீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

கோலி,டோனி ஆகிய இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது என்பது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடினமான பணிகளில் ஒன்றாக இருக்கும். இதற்கு அவர் தந்திரமான ஒரு பதிலை அளித்துள்ளார்.

இருவரையும் தேர்வு செய்து, அவர்கள் விளையாடுவதை வெளியில் இருந்து பார்ப்பேன் என கூறினார்.

கேள்வி: தொடக்க ஆட்டக்காரராக கோலி அல்லது டோனி யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

பெர்ரி அளித்த பதில்: இருவரையும் தேர்வு செய்து, அவர்கள் விளையாடுவதை வெளியில் இருந்து பார்ப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெண்கள் பிரிமீயர் லீக்கில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத பெங்களூரு இன்று நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்