< Back
கிரிக்கெட்
கேப்டன் பொறுப்பேற்க கோலி மிகுந்த அவசரம் காட்டினார்: சொல்கிறார் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர்

கோப்புப்படம் 

கிரிக்கெட்

கேப்டன் பொறுப்பேற்க கோலி மிகுந்த அவசரம் காட்டினார்: சொல்கிறார் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர்

தினத்தந்தி
|
15 Jan 2023 1:33 AM IST

விராட் கோலி, கேப்டன் பொறுப்பை பெற மிகுந்த அவசரம் காட்டியதாக முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் கூறியுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியில் 8 ஆண்டுகள் கேப்டனாக பணியாற்றிய விராட் கோலி அந்த பொறுப்பை பெற மிகுந்த அவசரம் காட்டியதாக முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் கூறியுள்ளார்.

ஸ்ரீதர் எழுதியுள்ள புத்தகத்தில் இது பற்றி குறிப்பிடுகையில், '2016-ம் ஆண்டில் வெள்ளைநிற பந்து கிரிக்கெட் போட்டிக்கான கேப்டன் பதவியையும் ஏற்க விராட் கோலி ரொம்பவே ஆர்வம் காட்டினார். ஒரு சில விஷயங்களை சொல்லி தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

ஒருநாள் மாலைப்பொழுதில், தலைமை பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி கோலியை அழைத்து பேசினார். அப்போது அவர், 'விராட்.... உங்களுக்கு டெஸ்ட் கேப்டன்ஷிப்பை டோனி வழங்கினார். அவரை நீங்கள் மதிக்க வேண்டும். உரிய நேரம் வரும் போது ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணிக்கான கேப்டன் பதவியையும் உங்களிடம் ஒப்படைப்பார். எது நடந்தாலும் பொறுத்திருங்கள் ' என்று அறிவுரை வழங்கினார்.

ஆனால் அந்த ஆண்டே அவருக்கு வெள்ளை நிற பந்து போட்டிக்கான கேப்டன்ஷிப்பும் கிடைத்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்