< Back
கிரிக்கெட்
கோலி, ரோகித் அல்ல... இவர் தான் என்னுடைய குரு - கலீல் அகமது

Image Courtesy: @BCCI 

கிரிக்கெட்

கோலி, ரோகித் அல்ல... இவர் தான் என்னுடைய குரு - கலீல் அகமது

தினத்தந்தி
|
18 Aug 2024 2:49 PM GMT

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது. இவர் இந்திய அணிக்காக கடந்த 2018ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது. இவர் இந்திய அணிக்காக கடந்த 2018ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை இந்திய அணிக்காக 11 ஒருநாள் மற்றும் 18 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

இவர் இந்திய அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கிரிக்கெட்டில் தன்னுடைய குரு யார்? என்பது குறித்து கலீல் அகமது பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நாங்கள் நியூசிலாந்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, கிரிக்கெட் ரசிகர்கள் தோனி பாய்க்கு மலர் கொத்துகளை கொடுத்தார்கள். ஆனால் அவர் அந்த மலர் கொத்துகளை எல்லாம் எனக்கு அனுப்பினார். இதனால் ரசிகர்கள் சிலர் என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இதை என்னால் மறக்க முடியாது.

தோனி பாய் என்னுடைய நண்பர் கிடையாது. மேலும் அவர் என்னுடைய மூத்த சகோதரரும் கிடையாது. ஏனென்றால் நான் அவரை என்னுடைய குருவாகப் பார்க்கிறேன். மேலும் நான் ஜாஹீர் கான் இந்திய அணிக்காக முதல் ஓவரை வீசுவதை பார்த்து வளர்ந்தவன். எனக்கும் இந்திய அணிக்காக முதல் ஓவரை வீச வேண்டும் என்ற கனவு இருந்தது.

இப்படியான நிலையில் 2018ம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரின் போது தோனி பாய் என்னை கூப்பிட்டு முதல் ஓவரை வீசும் படி கூறினார். அந்த நேரத்தில் என்னுடைய கனவு நனவானது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்