ஜடேஜாவின் தெளிவு தனக்கு வரவேண்டும் என கோலி வேண்டி இருப்பார் - சஞ்சய் மஞ்சரேக்கர்
|இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா சதம் அடித்து அசத்தினார்.
பர்மிங்காம்,
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டியில் கோலி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சதம் அடிக்க தவறி வரும் கோலி குறித்து முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் பேசியுள்ளார்.
கோலி குறித்து அவர் பேசியதாவது :
ஜடேஜா சிறப்பாக விளையாடினார். அவர் ஆஃப்-ஸ்டம்புக்கு சற்று வெளியே வந்த பந்துகளை விட்டுவிட்டு, ஆஃப்-ஸ்டம்புக்கு அருகில் இருக்கும்போது அவற்றை விளையாடினார். விராட் கோலி தனது ஆட்டத்தில் அத்தகைய தெளிவு வர வேண்டும் என்று வேண்டி கொண்டு இருக்கலாம். இன்று ஜடேஜாவிடம் அது இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.