< Back
கிரிக்கெட்
உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேன் கோலி தான் - ரிக்கி பாண்டிங் புகழாரம்
கிரிக்கெட்

உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேன் கோலி தான் - ரிக்கி பாண்டிங் புகழாரம்

தினத்தந்தி
|
6 Nov 2023 3:55 PM IST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி சதம் விளாசினார்.

புதுடெல்லி,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா அபார வெற்றிபெற்றது. இதில், இந்திய வீரர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49வது சதத்தை விளாசி சச்சினின் சாதனையை சமன் செய்தார்.

இந்நிலையில், சச்சினின் சாதனையை சமன் செய்த விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறுகையில், "உலகிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதை நான் நீண்டகாலமாக கூறிவருகிறேன். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை, அந்த சாதனையை முறியடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. விராட் கோலியின் ஒட்டுமொத்த பேட்டிங் சாதனையை பார்க்கும்போது அது நம்பமுடியாத அளவில் உள்ளது

விராட் கோலி 49வது சதம் விளாசிவிட்டார். சச்சின் டெண்டுல்கரை விட 175 ஆட்டங்கள் குறைவாக விளையாடி அவரின் சாதனையை கோலி சமன் செய்துவிட்டார் என்பதை நினைத்துப்பார்க்கும்போது நம்பமுடியவில்லை" என்றார்.

மேலும் செய்திகள்