< Back
கிரிக்கெட்
கேப்டனாக கோலி...உலகக்கோப்பை அணியை தேர்வு செய்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா...4 இந்திய வீரர்களுக்கு இடம்...!

Image Courtesy: AFP

கிரிக்கெட்

கேப்டனாக கோலி...உலகக்கோப்பை அணியை தேர்வு செய்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா...4 இந்திய வீரர்களுக்கு இடம்...!

தினத்தந்தி
|
13 Nov 2023 1:42 PM IST

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

மெல்போர்ன்,

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் நேற்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றன. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் நாளை மறுநாள் தொடங்குகிறது.

இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் அதில் சிறப்பாக செயல்பட்ட 11 வீரர்கள் கொண்ட அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டுள்ளார். ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த அணியில் ரோகித்துக்கு இடம் இல்லை.

இந்த அணியில் இந்தியா தரப்பில் 4 வீரர்களும், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா தரப்பில் தலா 3 வீரர்களும், நியூசிலாந்து தரப்பில் ஒரு வீரரும் இடம் பெற்றுள்ளனர். 12வது வீரராக இலங்கை வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், நெதர்லாந்து தரப்பில் எந்த வீரரும் தேர்வு செய்யப்படவில்லை.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த அணி விவரம்:-

டி காக் (தென் ஆப்பிரிகா) (விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), விராட் கோலி (இந்தியா) (கேப்டன்), எய்டன் மார்க்ரம் (தென் ஆப்பிரிக்கா), க்ளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), மார்கோ யான்சென் (தென் ஆப்பிரிக்கா), ரவீந்திர ஜடேஜா (இந்தியா), ஜஸ்ப்ரீத் பும்ரா (இந்தியா), முகமது ஷமி (இந்தியா), ஆடம் ஜாம்பா (ஆஸ்திரேலியா)

12வது வீரர்: தில்ஷன் மதுஷன்கா (இலங்கை)

மேலும் செய்திகள்