< Back
கிரிக்கெட்
லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து கே.எல். ராகுல் விலகல்..? வெளியான தகவல்
கிரிக்கெட்

லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து கே.எல். ராகுல் விலகல்..? வெளியான தகவல்

தினத்தந்தி
|
10 May 2024 4:38 AM IST

லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து கே.எல். ராகுல் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐதராபாத்,

அனல் பறக்க நடந்து வரும் 17-வது ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 166 ரன்கள் இலக்கை அபிஷேக் ஷர்மா (75 ரன்கள், 28 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), டிராவிஸ் ஹெட் (89 ரன்கள், 30 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் ஐதராபாத் அணி 9.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா, மைதானத்திலேயே அணியின் கேப்டன் லோகேஷ் ராகுலிடம் ஆக்ரோஷமாக விவாதித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனால் விரக்தி அடைந்த ராகுல் லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக நடப்பு சீசனின் எஞ்சிய 2 போட்டிகளிலும் நிகோலஸ் பூரன் கேப்டனாக செயல்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்