< Back
கிரிக்கெட்
கே.எல். ராகுலை இனி விக்கெட் கீப்பர் என்று சொல்ல முடியாது - இந்திய முன்னாள் வீரர் கருத்து

image courtesy: AFP

கிரிக்கெட்

கே.எல். ராகுலை இனி விக்கெட் கீப்பர் என்று சொல்ல முடியாது - இந்திய முன்னாள் வீரர் கருத்து

தினத்தந்தி
|
23 Aug 2024 7:04 PM IST

கே.எல். ராகுலை இனி கீப்பராக கருத முடியாது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) தொடர் செப்டம்பர் -5ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் முதல் சுற்றுக்கான அணி பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 'ஏ' அணிக்கு சுப்மன் கில், 'பி' அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன், 'சி' அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், 'டி' அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், சாய் சுதர்சன், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விளையாடுகிறார்கள். கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின் ஆகியோருக்கு இந்த போட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் கே.எல். ராகுலை இனிமேலும் விக்கெட் கீப்பர் என்று சொல்ல முடியாது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஏனெனில் காயமடைந்த ரிஷப் பண்ட்க்கு பதிலாக விக்கெட் கீப்பராக ராகுலுக்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்கியது. அந்த வாய்ப்பை பயன்படுத்திய ராகுல் ஒருநாள் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி இந்தியா பைனல் வரை செல்ல உதவினார்.

இருப்பினும் கடந்த ஐபிஎல் தொடரில் அவர் மோசமாக விளையாடிய நிலையில் தற்போது ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து வந்து விட்டார். அத்துடன் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயமடைந்த ராகுலுக்கு பதிலாக இளம் துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி ஆட்டநாயகன் விருது வென்றார்.

எனவே இனிமேலும் ராகுலை கீப்பராக கருத முடியாது என்று தெரிவிக்கும் ஆகாஷ் சோப்ரா இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"கே.எ.ல் ராகுல் விக்கெட் கீப்பராக இருக்க முடியாது. அதாவது இந்திய அணியில் அவருடைய பெயருக்குப்பின் நீங்கள் கீப்பர் என்று எழுத முடியாது. ஏனெனில் துருவ் ஜுரேலை நீங்கள் இந்திய டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். ரிஷப் பண்ட் இல்லாதபோது நீங்கள் ராகுலை கீப்பராக பயன்படுத்தியது பரவாயில்லை" என்று கூறினார்.

மேலும் செய்திகள்