< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
மும்பையில் பங்களா வாங்கிய கே.எல்.ராகுல் ...எத்தனை கோடி தெரியுமா..?
|18 July 2024 4:13 PM IST
கே.எல். ராகுல் மும்பையில் பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வருபவர் கே.எல்.ராகுல். இவர் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண பரிசாக சுனில் ஷெட்டி மும்பையில் உள்ள ரூ.50 கோடி மதிப்பிலான பங்களாவை வழங்கினார்.
இவர்கள் இருவரும் அங்கு கடந்த சில ஆண்டுகளாக வசித்து வரும் சூழலில், தற்போது சினிமா நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் குடியிருக்கும் பாலி ஹில் பகுதியில் கேஎல் ராகுல் ரூ.20 கோடி மதிப்பிலான பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.