கே.எல். ராகுல்-டோனி பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்த கோலி-சூர்யகுமார் யாதவ் ஜோடி
|கே.எல். ராகுல்-டோனி பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்து கோலி-சூர்யகுமார் யாதவ் ஜோடி புதிய சாதனை படைத்துள்ளனர்.
இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி அதிரடியாக விளையாடியது.
வெற்றிக்காக போராட்டிய தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் மில்லர் சதமும், டிகாக் அரை சதமும் அடித்தனர். ஆனார் 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சூர்ய குமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஜோடி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. டோனி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் அபாரமான பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்துள்ளனர்.
டோனி மற்றும் கேஎல் ராகுல் ஜோடி 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 13.10 ரன் ரேட்டில் 100 ரன்களை எடுத்தனர். அதற்கு அடுத்தப்படியாக கேஎல் ராகுல்-ரோகித் சர்மா ஜோடி 13.02 ரன் ரேட்டில் 100 ரன்கள் எடுத்திருந்தனர்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் விராட் கோலி - சூர்ய குமார் ஜோடி 14.57 ரன் ரேட்டில் 100 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளனர். இந்த போட்டியில் சூர்ய குமார் யாதவ் 22 பந்தில் 61 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 5 சிக்சர், 5 பவுண்டரி அடங்கும். விராட் கோலி 28 பந்தில் 49 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.