லக்னோ அணியில் இம்பேக்ட் வீரராக கே.எல். ராகுல்... கேப்டனாக பூரன்..காரணம் என்ன?
|ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ - பஞ்சாப் அணிகள் மோதின.
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வீசுவதற்கு லக்னோ அணியின் வழக்கமான கேப்டன் கே.எல். ராகுலுக்கு பதிலாக நிக்கோலஸ் பூரன் வந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. அதன் காரணம் என்னவெனில் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கே.எல். ராகுல் காயத்தை சந்தித்து அதற்கான சிகிச்சை மேற்கொண்டார். அதிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பின்பே அவர் இந்த தொடரின் முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார்.
ஆனால் காயத்திலிருந்து குணமடைந்ததும் உடனடியாக கேஎல் ராகுலை அதிகமாக விளையாட வைத்து ரிஸ்க் எடுக்க லக்னோ நிர்வாகம் விரும்பவில்லை. அதன் காரணமாக இந்த போட்டியில் லக்னோவின் கேப்டன்ஷிப் பொறுப்பு தற்காலிகமாக நிக்கோலஸ் பூரானிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே சமயம் கே.எல் ராகுல் இம்பேக்ட் வீரராக விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.