< Back
கிரிக்கெட்
சதம் அடிக்க கவாஜாவின் அனுபவம் உதவியது: ஆஸி. ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் பேட்டி

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

சதம் அடிக்க கவாஜாவின் அனுபவம் உதவியது: ஆஸி. ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் பேட்டி

தினத்தந்தி
|
11 March 2023 2:36 PM IST

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் சதம் அடித்தார்.

அகமதாபாத்,

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் சதம் அடித்தார். அவர் 170 பந்தில் 114 ரன் எடுத்தார். இதில் 18 பவுண்டரி அடித்தார். 20-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது முதல் சதமாகும். சதம் அடித்தது தொடர்பாக கேமரூன் கிரீன் கூறியதாவது:-

இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மதிய உணவு இடைவேளையின்போது நான் 95 ரன்னில் இருந்தேன். இடைவேளையின் 40 நிமிடங்கள் எனக்கு 1 மணி 40 நிமிடம் போல் இருந்தது. ஆனால் நான் உஸ்மான் கவாஜாவுடன் பேட்டிங் செய்தேன். அவர் அற்புதமாக பேட்டிங் செய்தார். அவரது அனுபவங்கள் எனக்கு நிறைய உதவியது. அந்த அனுபவம் சதம் அடிக்க உதவியது.

உஸ்மான் கவாஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். அவர் என்னை போன்ற வீரர்களுக்கு, தனது அனுபவத்தை பற்றி சொல்லும் விதத்தில் மிகவும் மதிப்புமிக்கவர். அவரிடமிருந்து என்னால் முடிந்த வரை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.

இது எனது 20-வது டெஸ்ட் போட்டி. டெஸ்ட் கிரிக்கெட்டின் ஏற்ற- தாழ்வுகளை பார்க்க எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. இது நம்ப முடியாத கடினமான ஆட்டம். இது போன்ற தருணங்களை நீங்கள் பெறும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும். டெஸ்ட் கிரிக்கெட் எவ்வளவு கடினமானது என்பதை பார்த்திருக்கிறேன். அதன் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்