பாரம்பரிய உடையில் பத்மநாப சுவாமி கோவிலுக்கு வந்த தென் ஆப்பிரிக்க வீரர்- ரசிகர்களுக்கு நவராத்திரி வாழ்த்து..!!
|இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் நாளை தொடங்குகிறது.
திருவனந்தபுரம்,
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக தென்ஆப்பிரிக்க வீரர்கள் நேற்று முன்தினம் இந்தியா வந்து சேர்ந்தனர்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் நாளை தொடங்குகிறது. பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி கடந்த ஜூன் மாதம் இந்திய சுற்றுப்பயணத்தின் போது டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த முறையும் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு மிகுந்த சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகராஜ் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலுக்குச் பாரம்பரிய உடையில் வருகை தந்துள்ளார். தனது ரசிகர்களுக்கு அவர் நவராத்திரி வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளார்.
கேசவ் மகராஜின் முன்னோர்கள் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் நகரத்தைச் சேர்ந்தவர்கள். பின்னர் அவர்கள் தென் ஆப்பிரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.