< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ரஞ்சி கிரிக்கெட் கால்இறுதியில் கர்நாடக அணி 474 ரன் குவிப்பு
|2 Feb 2023 1:26 AM IST
நேற்றைய ஆட்டம் முடிவில் கர்நாடக அணி 5 விக்கெட்டுக்கு 474 ரன்கள் குவித்துள்ளது.
பெங்களூரு,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கர்நாடகா-உத்தரகாண்ட் அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்சில் 116 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடக அணி தொடக்க நாளில் விக்கெட் இழப்பின்றி 123 ரன்கள் எடுத்து இருந்தது.
நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய கேப்டன் மயங்க் அகர்வால் 83 ரன்னிலும், ரவிகுமார் சமார்த் 82 ரன்னிலும், அடுத்து வந்த நிகின் ஜோஸ் 62 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 69 ரன்னிலும், மனிஷ் பாண்டே 39 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். நேற்றைய ஆட்டம் முடிவில் கர்நாடக அணி 5 விக்கெட்டுக்கு 474 ரன்கள் குவித்துள்ளது. ஸ்ரேயாஸ் கோபால் 103 ரன்களுடனும், ஷரத் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.