< Back
கிரிக்கெட்
ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி

கோப்புப்படம்

கிரிக்கெட்

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி

தினத்தந்தி
|
6 Feb 2024 7:03 PM IST

15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

பெனோனி,

15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் பெனோனியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்டோல்க் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஸ்டீவ் ஸ்டோல்க் 14 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய டேவிட் டீகர் டக் அவுட் ஆனார்.

இதையடுத்து லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் உடன் ரிச்சர்ட் செலட்ஸ்வேன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக அடி அணியை சரிவில் இருந்து மீட்டது. நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்னிலும், ரிச்சர்ட் செலட்ஸ்வேன் 64 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் இறங்கிய ஆலிவர் வைட்ஹெட் 22 ரன், திவான் மரைஸ் 3 ரன், ஜுவான் ஜேம்ஸ் 24 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டும், முஷீர் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 245 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் இந்திய அணி களம் இறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆதர்ஷ் சிங் -குல்கர்னி களமிறங்கினர். இதில் முதல் பந்திலேயே ஆதர்ஷ் சிங் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த முசீர் கானும் (4 ரன்) வந்த வேகத்தில் வெளியேறினார்.

இதனையடுத்து குல்கர்னி - உதய் சஹாரன் ஜோடி நிதானமாக விளையாடியது. ஆனால் இதில் குல்கர்னி 12 ரன்னிலும், அடுத்து வந்த பிரியன்ஷு மோலியா 5 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து இந்திய அணி 32 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து உதய் சஹாரனுடன் சச்சின் தாஸ் இணைந்தார். இந்த இணை நிதானமாக ஆடி வருகிறது. தற்போது வரை இந்திய அணி 17 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.



மேலும் செய்திகள்