ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்; நமீபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இலங்கை
|15-வது ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
கிம்பர்லி,
ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நமீபியா - இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 37.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 133 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இலங்கை அணி தரப்பில் சுபுன் வடுகே 56 ரன்கள் எடுத்தார். நமீபியா தரப்பில் வான் வூரென் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நமீபியா அணி இலங்கையின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
வெறும் 27 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நமீபியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 77 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. நமீபியா தரப்பில் பி.டி.பிலாக்னாட் 18 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி தரப்பில் விஷ்வ லஹிரு, ருவிஷான் பெரேரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.