< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதல்
|4 Feb 2024 8:06 AM IST
15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
பினோனி,
15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் குரூப் 1 பிரிவில் இந்தியா (8 புள்ளிகள்) முதலிடமும், பாகிஸ்தான் (8 புள்ளிகள்) 2-வது இடமும், குரூப் 2 பிரிவில் ஆஸ்திரேலியா (7 புள்ளிகள்) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (6 புள்ளிகள்) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.
இந்த போட்டி தொடரில் இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். இதையடுத்து வரும் 6-ந் தேதி பினோனியில் நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 8-ந் தேதி நடைபெறும் 2-வது அரைஇறுதியில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.