ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்; 2வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
|இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 11ம் தேதி பெனோனியில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளும்.
பெனோனி,
15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
இதையடுத்து கடந்த 6ம் தேதி நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து இறுதிப்போட்டியில் விளையாடும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் தொடரின் 2வது அரையிறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு பெனோனியில் தொடங்கும் அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 11ம் தேதி பெனோனியில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளும்.