< Back
கிரிக்கெட்
ஜூனியர் டெஸ்ட் : இந்தியா 316 ரன்கள் குவிப்பு
கிரிக்கெட்

ஜூனியர் டெஸ்ட் : இந்தியா 316 ரன்கள் குவிப்பு

தினத்தந்தி
|
8 Oct 2024 7:03 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா ஜூனியர் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கியது.

சென்னை,

ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா ஜூனியர் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வைபவ் சூர்யவன்ஷி (3 ரன்), விஹான் மல்கோத்ரா (10 ரன்) விரைவில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த நித்ய பாண்ட்யா 94 ரன்னும், கார்த்திகேயா 71 ரன்னும், நிகில் குமார் 61 ரன்னும் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 316 ரன்கள் குவித்தது. கேப்டன் சோஹம் பாத்வர்தன் 61 ரன்னுடனும், ஹர்வன்ஷ் பன்காலியா 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்