< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட்: அரையிறுதியில் ஜேப்பியார் பள்ளி வெற்றி
|31 Dec 2023 4:18 AM IST
இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் பள்ளி அணிகளுக்கு இடையிலான 8-வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.
சென்னை,
இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் பள்ளி அணிகளுக்கு இடையிலான 8-வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு அரையிறுதியில் நெல்லை நாடார் பள்ளி அணி நிர்ணயித்த 112 ரன் இலக்கை ஜேப்பியார் மெட்ரிக் 12.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில் லாலாஜி மெமோரியல் ஒமேகா பள்ளி 71 ரன்கள் வித்தியாசத்தில் புதூர் அரசு பள்ளியை தோற்கடித்தது. ஒமேகா அணியில் 83 ரன் விளாசிய கவுரவ் ரவீந்திரன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.