< Back
கிரிக்கெட்
ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த இந்தியா

image courtesy; twitter/@BCCI

கிரிக்கெட்

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த இந்தியா

தினத்தந்தி
|
30 Jan 2024 6:02 PM IST

இந்திய அணியில் அதிகபட்சமாக முஷீர் கான் 131 ரன்கள் குவித்து அசத்தினார்.

ப்ளூம்போன்டைன்,

15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முறையே முதல் 3 இடங்களை பெற்ற இந்தியா வங்காளதேசம், அயர்லாந்து (ஏ பிரிவு), தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் (பி பிரிவு), ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே (சி பிரிவு), பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம் (டி பிரிவு) ஆகிய அணிகள் 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறின.

'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு தகுதி பெற்ற 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம், நேபாளம், அயர்லாந்து ஆகிய அணிகளும், மற்றொரு பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி தனது 'சூப்பர் சிக்ஸ்' சுற்று ஆட்டங்களில் நியூசிலாந்து, மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுடன் மோதுகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.

அதன்படி இந்திய அணி தனது முதலாவது சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் இன்று மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நியூசிலாந்து பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை சேர்த்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய முஷீர் கான் 131 ரன்கள் குவித்து அசத்தினார்.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 295 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் நியூசிலாந்துக்கு 296 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மேசன் கிளார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

மேலும் செய்திகள்