< Back
கிரிக்கெட்
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

image courtesy; twitter/ @ACCMedia1

கிரிக்கெட்

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

தினத்தந்தி
|
8 Dec 2023 6:41 PM IST

பாகிஸ்தான் தரப்பில் முகமது ஜீஷான் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்

துபாய்,

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தானும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பானும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலாவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 47.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக உத்தம் மகர் 51 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஜீஷான் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 26.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 153 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அசான் அவாய்ஸ் 56 ரன்கள் எடுத்தார். நேபாளம் தரப்பில் குல்சன் ஜா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

மேலும் செய்திகள்