< Back
கிரிக்கெட்
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; அரையிறுதி ஆட்டத்தில்  இந்தியா - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்..!

Image Courtesy: @ACCMedia1

கிரிக்கெட்

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்..!

தினத்தந்தி
|
15 Dec 2023 9:51 AM IST

இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - யுஏஇ அணிகள் மோத உள்ளன.

துபாய்,

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், யுஏஇ அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.

இதில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் ஒரு அரையிறுதி ஆட்டத்திலும் , பாகிஸ்தான் - யுஏஇ அணிகள் மற்றொரு அரையிறுதி ஆட்டத்திலும் மோத உள்ளன. அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி வரும் 17ம் தேதி நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்