< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐசிசி-யின் மாதாந்திர சிறந்த கிரிக்கெட் வீரராக ஜானி பேர்ஸ்டோ தேர்வு..!!
|11 July 2022 9:52 PM IST
நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஜானி பேர்ஸ்டோ தேர்வு செய்யப்பட்டார்.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஜுன் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர், வீராங்கனைகள் பெயரை ஐசிசி பரிந்துரைத்து இருந்தது. சிறந்த வீரருக்கான பட்டியலில் ஜானி பேர்ஸ்டோ, டேரில் மிட்செல், ஜோ ரூட் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.
இதில் கடந்த மாதம் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஜானி பேர்ஸ்டோ சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த வீராங்கனைக்கான விருதை தென் ஆப்பிரிக்க வீராங்கனை மரிசான் கேப் தட்டி சென்றார்.