< Back
கிரிக்கெட்
இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் அலஸ்டயர் குக்கின் மாபெரும் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்
கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் அலஸ்டயர் குக்கின் மாபெரும் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்

தினத்தந்தி
|
30 Aug 2024 8:27 AM IST

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார்.

லண்டன்,

இங்கிலாந்து - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் அபார சதத்தின் உதவியுடன் முதல் நாளில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்துள்ளது. அபாரமாக விளையாடிய ஜோ ரூட் 143 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் அடித்த சதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 33-வது சதமாக பதிவானது. இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த அலஸ்டயர் குக்கின் மாபெரும் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்