< Back
கிரிக்கெட்
மீண்டும் களத்திற்கு திரும்பும் ஜோப்ரா ஆர்ச்சர்...எப்போது தெரியுமா..?
கிரிக்கெட்

மீண்டும் களத்திற்கு திரும்பும் ஜோப்ரா ஆர்ச்சர்...எப்போது தெரியுமா..?

தினத்தந்தி
|
5 April 2024 9:53 PM IST

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அடுத்த மாத இறுதியில் நடைபெற உள்ளது.

லண்டன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாத இறுதியில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மே மாதம் 22-ம் தேதி நடைபெற உள்ளது.

டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக நடைபெற உள்ள தொடர் என்பதால் இரு அணிகளும் தங்களது வீரர்களின் நிலையை அறிந்துகொள்ள உதவும். இதனால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக கடந்த 2021-முதல் தற்போது வரை களத்திற்கு திரும்பாமல் இருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் இடம்பெறுவார் என்று அந்த அணியின் இயக்குனர் ராப் கீ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ளதால் ஆர்ச்சரின் உடல்நிலையை அறிய இது உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்