அயர்லாந்துக்கு எதிரான டி 20 கிரிக்கெட் தொடர்: இந்திய அணிக்கு கேப்டனாக பும்ரா அறிவிப்பு
|அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
ஆசிய கோப்பை தொடங்கும் முன்பு இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அயர்லாந்துக்கு சென்று விளையாட உள்ளது. வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி டி 20 தொடர் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் பும்ரா சேர்க்கப்பட்டிருக்கிறார். சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் புதிய கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சிஎஸ்கே வீரர் ருத்ராஜ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று சிஎஸ்கே அணியின் சிவம் துபேவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஜெய் ஸ்வால், திலக் வர்மா, அதிரடி வீரர் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா ஆகியோரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். சுழற் பந்துவீச்சாளராக வாஷிங்டன் சுந்தர்,சேஷாஸ் அகமத், ரவி பிஷ்னாய் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
அயர்லாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் வருமாறு:
ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்) யாஸ்வஷ்சி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன்(கீப்பர்), ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது ரவி பிஷ்னாய், பரிஷத் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், அவேஷ்கான்