< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டத்தில் பங்கேற்க ஜெய் ஷா பக்ரைன் பயணம்
|4 Feb 2023 2:22 AM IST
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பக்ரைனில் இன்று நடக்கிறது.
புதுடெல்லி,
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பாகிஸ்தானில் நடக்கும் போட்டிக்கு இந்திய அணியால் செல்ல முடியாது என்பதால் இந்தபோட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா அறிவித்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பக்ரைனில் இன்று நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஜெய் ஷா பக்ரைன் சென்றுள்ளார். இந்த கூட்டத்தின் முடிவில் ஆசிய கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானில் நடக்குமா அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்பது தெரிய வரும்.