< Back
கிரிக்கெட்
4-வது வரிசையில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார்- சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர்
கிரிக்கெட்

4-வது வரிசையில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார்- சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர்

தினத்தந்தி
|
28 April 2024 6:03 PM IST

46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு அரங்கேறும் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.நடப்பு சாம்பியன் சென்னை அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்வி கண்டு 8 புள்ளிகள் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இன்றைய போட்டி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி கூறியதாவது,

சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்சின் சாதனை நன்றாகவே இருக்கிறது ரசிகர்களின் ஆதரவு கூடுதல் பலமாக இருக்கிறது. கடந்த சில ஆட்டத்தில் பனித்துளி தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததாக கருதுகிறேன். பனியின் தாக்கம் சி.எஸ்.கே. பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருந்தது. லக்னோவுக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் நேர்த்தியுடன் வீச இயலவில்லை.ஜடேஜா கடந்த சில ஆண்டுகளாக பின் வரிசையில் ஆடி வருகிறார். தற்போது 4-வது வீரராக ஆடி வருகிறார். ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார்.ரகானே நன்றாக விளையாடக் கூடியவர் ஒரு சில ஆட்டத்தை வைத்து முடிவு செய்துவிடக் கூடாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்