ஐசிசி விதிகளை மீறியதாக ஜடேஜாவிற்கு 25% அபராதம்
|டெஸ்ட் போட்டியில் ஐசிசி விதிகளை விதிகளை மீறியதாக ரவீந்திர ஜடேஜாவிற்கு போட்டியின் சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாக்பூர்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 223 ரன்கள் முன்னிலை பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 120 ரன்கள் , ஜடேஜா 70 ரன் அக்சர் படேல் 84 ரன்கள் எடுத்தனர்.
223 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 32.1 ஓவர்களில் 91ரன்களுக்கு 10 விக்கெட் இழந்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில்,முதல் நாள் போட்டியில் ஜடேஜாவும், ரோகித் சர்மாவும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பந்தை வைத்திருந்த ஜடேஜா, தனது விரலில் ஏதோ ஒன்றை தேய்த்தார் . முகமது சிராஜிடம் இருந்து அதனை ஜடேஜா வாங்கி தனதுவிரலில் தேய்ப்பது வீடியோவின் மூலம் தெரிகிறது.
இதனை ஆஸ்திரேலிய மீடியாக்கள்,பந்து வீச வஜடேஜா ஒருவகை கிரீமை கொண்டு பந்தை சேதப்படுத்தியதாக தெரிவித்தது.
ஆஸ்திரேலிய மீடியாக்களின் கருத்தை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து அணி நிர்வாகம் கூறுகையில், ஜடேஜா, தனது விரலில் வலி நிவாரணிக்காக பயன்படுத்தப்படும் மருந்தையே பயன்படுத்தினார் என்றும், அவர் பந்தை சேதப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் ஐசிசி விதிகளை விதிகளை மீறியதாக ரவீந்திர ஜடேஜாவிற்கு போட்டியின் சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி நடுவர்களிடம் தெரிவிக்காமல் கை விரலில் வலி நிவாரணி மருந்தை பயன்படுத்தியதால் அபாராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.