< Back
கிரிக்கெட்
ஸ்டம்பிங் ரிவ்யூ கேட்டால் இனி... - ஐசிசி கொண்டுவந்த  அதிரடி விதிமுறை
கிரிக்கெட்

'ஸ்டம்பிங் ரிவ்யூ' கேட்டால் இனி... - ஐசிசி கொண்டுவந்த அதிரடி விதிமுறை

தினத்தந்தி
|
5 Jan 2024 8:41 AM IST

சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆண்டும் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படும்.

துபாய்,

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் ஸ்டம்பிங் ஆவதை மூன்றாவது நடுவர் ரிவ்யூ செய்யும்போது, பந்து பேட்டில் உரசி கேட்ச் ஆனதா? என்பது சோதிக்கப்பட்டு அதன்பின்னர் ஸ்டம்பிங் சோதனை செய்யப்படும் . இது பந்துவீசும் அணிக்கு சாதகமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் ஐசிசி அந்த விதிமுறையில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் ரிவ்யூ செய்யும்போது , லெக் சைட் நடுவர் ஸ்டம்பிங் தீர்ப்புக்காக 3ஆவது நடுவரிடம் சென்றால், லெக் அல்லது ஆப் திசையில் உள்ள கேமராக்களின் மூலமாக மட்டுமே ஸ்டம்பிங் சோதனை செய்யப்படும் என்றும் கீப்பர் கேட்ச் பிடிக்கப்பட்டதற்கான ஸ்னிக்கோமீட்டர் சோதனை செய்யப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு வீரர் தலையில் காயமடைந்து கன்கஷன் விதியின் மூலம் வெளியேறினால், அவருக்கு பதிலாக வரும் வீரர் ஏற்கனவே பந்துவீசுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தால். அவர் பந்துவீச அனுமதிக்கப்பட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்