< Back
கிரிக்கெட்
இது வெறும் முதல் போட்டிதான் - தோல்வி குறித்து லக்னோ அணியின் கேப்டன் பேட்டி

image courtesy: twitter/ @LucknowIPL

கிரிக்கெட்

இது வெறும் முதல் போட்டிதான் - தோல்வி குறித்து லக்னோ அணியின் கேப்டன் பேட்டி

தினத்தந்தி
|
25 March 2024 6:12 PM IST

நடப்பு ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணி, தனது முதலாவது போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது.

ஜெய்ப்பூர்,

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் தோல்வி குறித்து லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் போட்டியின் முடிவில் அளித்த பேட்டியில்,

"இது வெறும் முதல் போட்டிதான். எனவே அதில் சந்தித்த தோல்வியைப் பற்றி நான் அதிகமாக சிந்தித்து ஆராயப் போவதில்லை. பவர் பிளே என்பது ஒவ்வொரு அணிக்கும் முக்கியம். முதல் சீசனில் மோஷின் கான் எங்களுடைய பவர் பிளே பவுலராக இருந்தார். ஆனால் கடந்த சீசனில் அவர் பிட்டாக இல்லை. இம்முறை அவரும் நவீனும் சேர்ந்து மீண்டும் அசத்துவதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. இந்த இலக்கு எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை.

நாங்கள் நன்றாக பந்து வீசியும் சில தவறுகளை செய்தோம். அதிலிருந்து நாங்கள் பாடங்களையும் கற்றுள்ளோம். ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தும் நாங்கள் 194 ரன்களை நெருங்கியதே எங்களுடைய பேட்டிங் வரிசையின் தரத்தை பற்றி பேசுகிறது. ஆனால் நாங்கள் வெற்றி பெறுவதற்கான வழியை கண்டறிய வேண்டும். இங்கிருந்து நாங்கள் எப்படி வலுவாக மாற முடியும் என்பதை பற்றி பார்க்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்