< Back
கிரிக்கெட்
இது ஒரு அற்புதமான கிரிக்கெட்; அமெரிக்கா - பாகிஸ்தான் ஆட்டம் குறித்து கேன் வில்லியம்சன் கருத்து

கோப்புப்படம்

கிரிக்கெட்

'இது ஒரு அற்புதமான கிரிக்கெட்'; அமெரிக்கா - பாகிஸ்தான் ஆட்டம் குறித்து கேன் வில்லியம்சன் கருத்து

தினத்தந்தி
|
7 Jun 2024 9:07 AM GMT

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

நியூயார்க்,

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 159 ரன்கள் அடித்தது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்காவும் 159 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 18 ரன்கள் அடித்தது. அதைத்தொடர்ந்து 19 ரன்களை துரத்திய பாகிஸ்தான் 1 விக்கெட்டை இழந்து 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 5 ரன் வித்தியாசத்தில பாகிஸ்தானை அமெரிக்க அணி வீழ்த்தியது.

இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது, கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இது மிகவும் சிறந்த ஒன்று. இது ஒரு அற்புதமான கிரிக்கெட். இந்த டி20 உலக கோப்பை தொடரில் எது வேண்டுமானாலும் யாருக்கும் நடக்கலாம். இதுதான் இந்த விளையாட்டின் அழகு. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்