< Back
கிரிக்கெட்
ஒருநாள் போட்டியை பார்க்க சலிப்பா இருக்கு..! சுவாரஸ்மாக மாற்ற சச்சின் புதிய யோசனை
கிரிக்கெட்

ஒருநாள் போட்டியை பார்க்க சலிப்பா இருக்கு..! சுவாரஸ்மாக மாற்ற சச்சின் புதிய யோசனை

தினத்தந்தி
|
18 March 2023 4:10 PM IST

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சலிப்பை ஏற்படுத்துவதாகவும், அதில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும் சச்சின் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சலிப்பை ஏற்படுத்துவதாகவும், அதில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.

தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது ,

தற்போது விளையாடப்பட்டு வரும் ஒருநாள் கிரிக்கெட் வடிவமானது சலிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. , இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுவதால் போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் என்பதே தற்போது இல்லை. இன்றைய கால போட்டிகள் மிகவும் கணிக்கக்கூடிய வகையில் இருப்பதோடு, பந்துவீச்சாளர்களுக்கு அதிக சுமையையும் தருகிறது. 15-வது ஓவர் முதல் 40 ஓவர் வரையில் ஆட்டம் தனது போக்கையே இழந்து சலிப்பை ஏற்படுத்துகிறது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 25, 25 ஓவர்களாக 4 கால் பகுதிகளாக டெஸ்ட் போட்டிகளை போல நடத்தினால் சுவாரஸ்யத்தை மேலும் கூட்ட முடியும் என தனது யோசனையை தெரிவித்தார்

ஒவ்வொரு 25 ஓவர்களுக்குப் பிறகும் அணிகள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையில் மாறி மாறி விளையாட வேண்டும். அதன்மூலம் டாஸ், பணி மற்றும் பிற நிலைமைகளில் எதிரணிக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும். . அதன்படி, முதல் 25 ஓவர்கள் பேட்டிங் செய்யும் அணி அடுத்த 25 ஓவர்கள் பந்து வீச வேண்டும். அதைதொடர்ந்து, மீண்டும் 25 ஓவர்கள் பேட்டிங் செய்து விட்டு மீண்டும் எதிரணிக்கு பேட்டிங் வாய்ப்பை வழங்க வேண்டும். இதன் மூலம், இரு அணிகளும் முதல் மற்றும் இரண்டாவது பாதியில் பந்து வீசுகின்றன. வணிக ரீதியாகவும் இது மிகவும் சாத்தியமானது. . என சச்சின் கூறினார்.

மேலும் செய்திகள்