< Back
கிரிக்கெட்
சிஎஸ்கே அல்லது ஐதராபாத் அணிகளில் ஏதாவது ஒன்று என்னை ஏலத்தில் வாங்கினால் நன்றாக இருக்கும் - வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர்

image courtesy; AFP

கிரிக்கெட்

சிஎஸ்கே அல்லது ஐதராபாத் அணிகளில் ஏதாவது ஒன்று என்னை ஏலத்தில் வாங்கினால் நன்றாக இருக்கும் - வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர்

தினத்தந்தி
|
10 Dec 2023 1:58 PM IST

ஐபிஎல் அடுத்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது.

கயானா,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு கடந்த மாதம் 26ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்பித்தன.

இதனையடுத்து இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 1,166 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஐதராபாத் மற்றும் சிஎஸ்கே அணிகளில் ஏதாவது ஒன்று தன்னை ஏலத்தில் வாங்கினால் நன்றாக இருக்கும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டரான ஜேசன் ஹோல்டர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : 'டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் விளையாடுவது நிச்சயம் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னை பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுடன் சில சீசன்களில் விளையாடியுள்ளேன். எனவே அந்த அணிகளில் ஏதாவது ஒரு அணி என்னை ஏலத்தில் வாங்கினால் நன்றாக இருக்கும். ஆனால் ஏலம் என்பது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை' என்று கூறினார்.

மேலும் செய்திகள்