< Back
கிரிக்கெட்
It was like Jacques Kallis playing... Joe Root praising Gus Atkinson

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

ஜாக் காலிஸ் ஆடுவதை போல் இருந்தது... கஸ் அட்கின்சனை பாராட்டிய ஜோ ரூட்

தினத்தந்தி
|
31 Aug 2024 4:49 PM IST

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கஸ் அட்கின்சன் சதம் அடித்து அசத்தினார்.

லண்டன்,

இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில், 2-வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 427 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்களும், கஸ் அட்கின்சன் 118 ரன்களும் அடித்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 196 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கமிந்து மென்டிஸ் 74 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன், கிறிஸ் வோக்ஸ், மேத்யூ போட்ஸ், ஆலி ஸ்டோன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 231 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 25 ரன்கள் அடித்திருந்தது. பென் டக்கெட் 15 ரன்களுடனும், ஆலி போப் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்திய கஸ் அட்கின்சனை, முன்னணி வீரரான ஜோ ரூட் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நல்ல இன்னிங்ஸ். அருமையான இன்னிங்ஸ். நான் எதிர்முனையில் இருந்து கஸ் அட்கின்சன் பேட்டிங்கை ரசித்தேன்.

அதுவும் அவர் (கஸ் அட்கின்சன்) அடித்த நேர் சிக்சர்களை என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் மூழ்கினேன். அவர் ஆடியது தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் ஆடுவதைப் போலவே இருந்தது. நாங்கள் நல்ல கூட்டணி (பார்ட்னர்ஷிப்) அமைத்தோம். கஸ் அட்கின்சன் சதத்தினால் இப்போது டெஸ்ட்டில் நல்ல நிலைமையில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்