அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்தது சிறப்பானது- ரிஷப் பண்ட்
|இந்திய அணிக்காக சதமடித்து கம்பேக் கொடுத்தது சிறப்பானது என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
சென்னை,
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்துள்ளது. இதில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார். இதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 6 சதங்கள் அடித்துள்ளார். அதனால் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையையும் ரிஷப் பண்ட் சமன் செய்தார்.
இந்நிலையில் இந்திய அணிக்காக சதமடித்து கம்பேக் கொடுத்தது சிறப்பானது என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார். அத்துடன் 2வது இன்னிங்ஸில் 30-3 என இந்தியா தடுமாறியபோது சுப்மன் கில்லுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்ததும் சிறப்பானது என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த சதம் ஸ்பெஷல். ஏனெனில் நான் சென்னையில் விளையாடுவதை விரும்புகிறேன். காயத்திற்கு பின் நான் 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாட விரும்புகிறேன். இது டெஸ்ட் பார்மட்டில் காயத்திலிருந்து வந்த பின் அடித்த முதல் சதமாகும். அதை உணர்வுபூர்வமாக கொண்டாடினேன். ஒவ்வொரு போட்டியிலும் இப்படி ரன்கள் குவிக்க விரும்புகிறேன். எனக்கு மிகவும் பிடித்த டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சி. மீண்டும் மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்தது உணர்வுபூர்வமாக இருந்தது.
ஆனால் நாளின் இறுதியில் இந்தியாவுக்காக களத்தில் சாதாரண வீரராக விளையாடுவது மற்றதை விட சிறந்த உணர்வை கொடுக்கிறது. சூழ்நிலையை எனது வழியில் படிக்க முயற்சிக்கிறேன். இந்தியா 30-3 என இருந்தபோது நீங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும். அதைத்தான் சுப்மன் கில்லுடன் சேர்ந்து செய்தேன். களத்திற்கு வெளியே நல்ல உறவை கொண்டுள்ள ஒருவருடன் நீங்கள் களத்தில் பார்ட்னர்ஷிப் அமைப்பது சிறப்பானது" என்று கூறினார்.