< Back
கிரிக்கெட்
ஜடேஜாவை பிராங்க் செய்ய சொன்னதே தோனி தான் - துஷார் தேஷ்பாண்டே

Image Courtesy: Twitter 

கிரிக்கெட்

ஜடேஜாவை பிராங்க் செய்ய சொன்னதே தோனி தான் - துஷார் தேஷ்பாண்டே

தினத்தந்தி
|
9 April 2024 1:35 PM IST

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

சென்னை,

ஐ.பி.எல் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி சென்னையின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த கொல்கத்தா 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் ஜடேஜா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 138 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 141 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக கெய்க்வாட் 67 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. முன்னதாக சென்னை அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தபோது ஷிவம் துபே ஆட்டம் இழந்தார்.

அதன்பின், டோனி களம் இறங்குவார் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த வேளையில், ட்ரெஸ்சிங் ரூமில் இருந்து ரவீந்திர ஜடேஜா சிரித்தபடியே பேட்டை எடுத்துக்கொண்டு மைதானத்திற்குள் நுழைய முயலுவதுபோல சென்று பின் திரும்பவும் ட்ரெஸ்சிங் ரூமிற்கு உள்ளே சென்றார். இதனைப் பார்த்த சக சி.எஸ்.கே. வீரர்கள் மற்றும் ரசிகர்களின் சிரிப்பலையில் அரங்கம் அதிர்ந்தது. சிறிது நேரத்தில் வெளியே வந்த மகேந்திர சிங் டோனிக்கு அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பி தங்களது உற்சாக வரவேற்பினை அளித்தனர்.

இதுதொடர்பான காட்சிகளை ரசிகர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, அது வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஜடேஜாவை அவ்வாறு பிராங்க் செய்ய சொன்னதே தோனி தான் என துஷார் தேஷ்பாண்டே கூறியுள்ளார். இது குறித்து தேஷ்பாண்டே கூறும்போது, நீ பேட்டிங் செய்ய கிளம்புவதுபோல நடி. பின் திரும்பி வந்துவிடு. அதற்குள் நான் கிரவுண்டிற்குள் செல்கிறேன்' என்று தோனி ஜடேஜாவிடம் சொன்னதை நான் கேட்டேன் என கூறியுள்ளார்

மேலும் செய்திகள்