< Back
கிரிக்கெட்
டி20 உலக கோப்பை தொடரிலும் ஜடேஜா விளையாடமாட்டார் என தகவல்
கிரிக்கெட்

டி20 உலக கோப்பை தொடரிலும் ஜடேஜா விளையாடமாட்டார் என தகவல்

தினத்தந்தி
|
3 Sept 2022 7:59 PM IST

முழங்கால் காயம் காரணமாக ஆசிய கோப்பையிலிருந்து விலகியுள்ள நிலையில் டி20 உலகக்கோப்பையிலும் ஜடேஜா விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை,

இந்திய அணியின் ஆல்ரவுண்டராக விளையாடி வரும் ஜடேஜா ஆசிய கோப்பையில் விளையாடி வந்தார். அப்போது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக அக்சர் படேலை பிசிசிஐ அறிவித்தது.

இந்த நிலையில், அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் காயத்தில் அளவு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார்.

அறுவைச்சிகிச்சைக்கு பிறகு அவர் காயத்தில் இருந்து மீண்டு வர மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் ஆகும் என தெரியவந்துள்ளது. அவர் சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கு முன்பு போதிய காலம் தேவைப்படும் என்பதால், அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடமாட்டார் என தெரியவந்துள்ளது.

ஜடேஜா டி20 உலகக்கோப்பையில் விளையாடாடது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்