< Back
கிரிக்கெட்
இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தோல்வி; இந்திய கேப்டன் ரோகித் கூறியது என்ன?
கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தோல்வி; இந்திய கேப்டன் ரோகித் கூறியது என்ன?

தினத்தந்தி
|
5 Aug 2024 5:31 AM IST

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

கொழும்பு,

இலங்கை, இந்தியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, போட்டியில் தோல்வியடைந்தால் அனைத்தும் வலிகள்தான். இது 10 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்தது குறித்து அல்ல. நாங்கள் சீரான கிரிக்கெட் ஆட வேண்டும். ஆனால், அதில் நாங்கள் தோல்வியடைகிறோம். இப்போட்டியில் தோல்வியடைந்தது வருத்தம்தான் ஆனால், சில சமயங்களில் இவ்வாறு நடக்கலாம்.

நாங்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எவ்வாறு ஆடவேண்டும் என்பது குறித்தும் மிகவும் ஆராயப்போவதில்லை. ஆனால், மிடில் ஆடரில் எங்கள் பேட்டிங் குறித்து விவாதம் எழும்' இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்