இஷான் கிஷனுக்கு அபராதம் விதித்த ஐ.பி.எல். நிர்வாகம்...எவ்வளவு தெரியுமா..?
|ஐ.பி.எல். நடத்தை விதிகளை மீறியதற்காக இஷான் கிஷனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ஐ.பி.எல் தொடரில் நேற்று மாலை டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி ஜேக் ப்ரேசர் மெக்கர்க்கின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 257 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.
இந்த போட்டியின்போது ஐ.பி.எல். நடத்தை விதிகளை மீறியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் இஷான் கிஷனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இஷான் கிஷனுக்கு எதனால் அபராதம் விதிக்கப்பட்டது? என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.